Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 12 April 2014

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும். அதை 'கிளிக்' செய்தால், 'செக் யுவர் இ.சி.எஸ்., ஸ்டேட்டஸ்' என்ற விபரம் வரும். அதில் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகம், ஓய்வூதிய கொடுப்பாணை எண் (பி.பி.ஓ.,), எந்த தேதி முதல் எந்தத் தேதி வரை என்பதை பூர்த்தி செய்தால், ஓய்வூதியரின் கணக்கில், எந்தெந்த தேதிகளில், எந்த வகையில் பணம் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது, என்ற விபரம் தெரியும். இதற்காக, கருவூலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இதில் 2013 செப்டம்பர் முதல் உள்ள விபரங்களை பெறலாம்.

No comments:

Post a Comment