Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 10 April 2014

அனுமதி பெறாத பாட புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை

பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது. ஒப்புதல் இல்லாத புத்தகங்களை, எந்த பள்ளிகளும் பயன்படுத்தக் கூடாது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், எச்சரித்து உள்ளார்.

சமீபத்தில், எல்.கே.ஜி., பாட புத்தகத்தில், 'எஸ்' என்ற வார்த்தையை குறிக்க, 'சன்' (சூரியன்) படம் வரையப்பட்டிருப்பது குறித்த விவகாரம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை: பொதுக்கல்வி வாரியத்திடம் ஒப்புதல் பெறாத பாட புத்தகங்களை, சில பள்ளிகள், வகுப்பறையில் பயன்படுத்துவது குறித்து, கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, அம்பத்தூரை சேர்ந்த, 'உட்பெக்கர்' பதிப்பகத்தின், எல்.கே.ஜி., இரண்டாம் பாகம் புத்தகத்தில், ஆட்சேபனைக்குரிய பகுதிகள் இருப்பதாக, புகார் வந்துள்ளது. இந்த புத்தகம், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்கல்வி வாரியத்தின் அனுமதி பெறாதவை. எனவே, தனியார் பள்ளிகளில், சம்பந்தப்பட்ட பாட பகுதிகளை, உடனடியாக புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்களும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும், நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'பொதுக்கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெறாத பாட புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment