Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 10 April 2014

கல்விக்கடன் பெற பணிந்து போக வேண்டுமா?

வங்கியில், கல்விக்கடன் பெற, பணிந்து போக வேண்டியது அவசியம் என, வங்கி அதிகாரி குறிப்பிட்டது, புண்படுத்தும் செயல்' என, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுவின், முன்னாள் உறுப்பினர், மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'வங்கி கடனை பெறுவது எப்படி; வணங்காமுடி ஆலோசனை' என்ற தலைப்பில், வெளியான செய்தியில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 'கல்விக் கடன் பெற, வங்கி அதிகாரிகளிடம், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறு; ஆதிதிராவிட மாணவர்களை மட்டும் புண்படுத்தும் செயலாகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment