Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 15 April 2014

பெண் ஆசிரியர்களுக்கு குடியிருப்புக்கு அருகில் தேர்தல் பணி வழங்க வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தது போல் பெண் ஆசிரியர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் தலைவர் தி.கண்ணன், பொதுச்செயலாளர்(பொ) செ.பாலசந்தர், மாநிலப்பொருளாளர் ச.மோசஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறுகின்றத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நேர்மையுடனும் சிறப்பாகவும் நடத்தி வருகின்றது. தேர்தல் பணியில் அமர்த்தப்படுகின்ற ஆசிரியர்கள் உட்பட்ட பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை கடமையுணர்வோடு நடுநிலை தவறாமல் செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் கல்வித்துறையில் தற்போது ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களே அதிகம் பணியாற்றுவதால் தேர்தல் பணியில் பெண் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது அவர்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படுத்தாத வண்ணம் வருகின்ற ஏப்ரல் - 24ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணியமர்த்தப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.பெண் ஆசிரியர்களுக்கு இவ்வறிவிப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தேர்தல் பணியில் அவர்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு பணியமர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாணை பெற்ற பெண் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெகு தொலைவில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்த படி பெண் ஆசிரியர்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படுத்தாத வண்ணம் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பணியாணை வழங்க மாவட்டத் தேர்தல் அலுவலகர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment