Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 15 April 2014

இடதுசாரிக் கட்சிகளுக்கு பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை ஆதரவு Theekkathir News

16வது மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆதரவு தெரிவித்துள்ளது.“இந்தியாவின் எதிர்காலம் வகுப்ப றையில்தான் தீர்மானிக்கப்படுகிறது” என்று கோத்தாரி கல்விக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய வகுப்பறைகள் ஏற்றத்தாழ்வுடன் இருக்குமேயானால் அது ஆரோக்கியமான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தாது. குழந் தைப்பருவத்தில் பேதமற்ற சமமான கல்வி கற்கும்வாய்ப்பினை அனைத்து குழந்தைகளும் பெற வேண்டியே, அரசின் முழுப்பொறுப்பிலும் செல விலும் பிறப்பு முதல் 18 வயது வரை அல்லது மேல்நிலைப்பள்ளிக்கல்வி முடியும் வரை, அரு காமைப்பள்ளி மூலம் கல்வி உரிமையை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கருதுகிறது.ஆசிரியர் பணியை இலாபம் ஈட்டும் தொழி லாக கருதக்கூடாது.
இந்திய உயர்கல்வியை சீரழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிலுiவியலுள்ள உயர்கல்வி மசோதாக் கள் திரும்பப் பெறப்பட்டு, அன்னிய பல்கலைக் கழகங்கள் இந்தியாவின் உயர்கல்வியில் நுழை வதை தடுக்க வேண்டும் என்று போராடி வருகிறது.வெளியிடப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆய்வு செய்ததில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) மட்டுமே. தனது அறிக்கையில் அருகாமைப்பள்ளி உருவாக்குதல், கல்வியை வணிகமயமாக்கி அன்னியரை நுழையவிடும் மசோதாக்கள், தில்லி பல்கலைக்கழகத்தின் 4 ஆண்டு பட்டப்படிப்பு ஆகியவற்றை திரும்பப் பெறுவது பற்றியும் கல்வியும் வணிகமய மாதலை ஒழித்து அனைவருக்கும் கல்வி பரவலாக்கப் படுதல் உறுதியாக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இடதுசாரி எம்பிக்களின்கடந்தகால சாதனைகள்
ஆயுள் காப்பீட்டுக்கழகத்தை உடைத்து சீரழிக்க தாக்கல் செய்த மசோதாவை நாடாளு மன்றத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த இடதுசாரி எம்பிக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மசோதாவை திரும்பப்பெற வேண்டிய நிலை ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசுக்கு உருவானது. அதன் விளைவாக பொதுத்துறை ஆயுள் காப் பீட்டுக்கழகம் காப்பாற்றப்பட்டது.ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த ப.சிதம்பரம் பொதுத்துறை காப்பீட்டுக்கழகங்களை தனியார் மயமாக்கிட தாக்கல் செய்த மசோதாவை இடது சாரி எம்பிக்களின் கடும் எதிர்ப்பால், பிரதமர் குஜ் ரால் எழுந்து மசோதாவை திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
நிதியமைச்சர் தாக்கல் செய்த மசோதாவை பிரதமர் திரும்பப்பெறுவதாக அறிவித்தது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.எஸ்.ராமதாஸ், மகன் மரு. அன்புமணி ராமதாஸ் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, நூற்றாண்டு பழமைவாய்ந்த மூன்று பொதுத்துறை நோய் தடுப்பு உற்பத்தி நிறுவனங்களை மூடிவிட உத்தரவிட்டபோது, மிக குறைந்த விலையில் நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து தரும் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவது என்பது இந்திய நாட்டில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமல்லாது, மிக குறைந்த விலையில் நோய் தடுப்பு மருந்துகளை பெற்று பயனடைந்து வந்த மூன்றாம் உலக நாடுகளில் பிறக்கும் ஏழைக் குழந்தைகளையும் பாதிக்கும் செயல் என நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் வலுவான குரல் எழுப்பி போராடியவர்கள் சிபிஐ(எம்) எம்பிக்கள் மட்டுமே.சிபிஐ(எம்) எம்பிக்களின் எதிர்ப்பின் விளைவாக மூடப்பட்ட மூன்று பொதுத்துறை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பிறகு உற்பத்தியை தொடங்குவதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
மற்ற எந்தக் கட்சியும் கவலைப்படாமல் இருந்த வேளையில் ஏழை, எளிய குழந்தைகளின் உயிரைக் காக்கும் இப்போராட்டத்தை நடத்தி வெற்றிகண்டது. சிபிஐ(எம்) எம்பிக்களின் வரலாற்றுச் சாதனை. மூன்றில் இரண்டு நிறுவனங்கள் (பாஸ்டர் நிறுவனம் - குன்னூர், பிசிஜி-வி.எல்- கிண்டி) தமிழ்நாட்டில் இருப்பதும் போராடிய எம்பிக்களில் இருவர் (கோயம்புத்தூரில் பி.ஆர்.நடராஜன் கன்னியாகுமரியில் ஏ.வி.பெல்லார்மின்) தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளர்களாக போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருந்தாலும் நாட்டின் இறை யாண்மையை பொதுத்துறையைக் காப்பாற்றியதும் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை எழுப்பி வெற்றி கண்டதும் இடதுசாரி எம்பிக்களே.எதிர்காலத் தலைமுறையின் கல்வி, சுகா தாரம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் மேம் பாடு, மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தீர்த்தல், குடிநீர் வணிகப் பொருளாக மாறுவதை தடுத்தல் ஆகியவற்றை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதால், நம் தேசத்தின் மனச்சாட்சிகளாகத் திகழும் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றால் தான் மக்களுக் கான கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார உரிமைகள் காக்கப்படும்.
இச்சூழலை கணக்கில் எடுத்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை 16வது மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் 18 தொகுதிகளில் போட்டியிடும் சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு மக்கள் தங்களின் மதிப்புமிக்க வாக்கு களை அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.மேற்கண்டவாறு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment