Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 16 April 2014

தேர்தல் பயிற்சி வகுப்பு: தேர்வுகள் ஒரு நாள் ஒத்திவைப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால், பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வு, நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விடைத்தாள் மதிப்பீடு பணிகளும், ஒரு நாள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 1, 500க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்பட, 90 சதவிகிதம் பேரை, தேர்தல் பணிக்கு மாவட்ட நிர்வாகம் அழைத்துள்ளது.
இதில் ப்ளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவடைந்த நிலையில், மற்ற வகுப்புகளுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. இன்று, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெற இருந்த நிலையில், தேர்தல் பணியில் கலந்து கொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று நடக்கும் பயிற்சி வகுப்பில், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், பள்ளிகளில் தேர்வை நடத்த ஒரு ஆசிரியர்கள் கூட இருக்க முடியாத நிலை உருவானது. இதனால், தேர்வை எப்படி நடத்துவது என தெரியாமல், தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பின், தேர்வை ஒரு நாள் ஒத்தி வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், தலைமை ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், கல்வித்துறையின் இந்த தாமத செயல்பாட்டால், தேர்வு ஒத்தி வைக்கப்படும் தகவலை மாணவர்களுக்கு எப்படி தெரிவிப்பது என விழித்து வருகின்றனர். இதே போல், விடைத்தாள் மதிப்பீடு பணியில் இருக்கும் ஆசிரியர்களும், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், இன்று ஒரு நாள் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கும் விடுமுறை விட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
இன்று தேர்தல் பயிற்சி வழங்கப்படும் என்ற தகவல் முன்கூட்டியே தெரிந்த நிலையில், தேர்வை ஒத்தி வைப்பது குறித்து, மாவட்ட கல்வி நிர்வாகம் முன்கூட்டியே யோசிக்காமல், தலைமை ஆசிரியர்கள் கேள்வி கேட்டபின் தாமதமாக கண்விழித்து, மதியத்துக்கு மேல் தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால், நாளை தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், பள்ளிக்கு வந்து ஏமாற்றமடைவதை தடுக்க முடியவில்லை. ஒட்டு மொத்த ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சிக்கு செல்வதால், பள்ளியில் கல்விப்பணி, விடைத்தாள் மதிப்பீட்டு பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் இன்று பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment