Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 9 April 2014

தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

வேலூர், ஆரணி சாலையை சேர்ந்த, வெங்கடேஷ் மனைவி லட்சுமி பிரபா, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:

இழப்பீடு:


அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேருவதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும், 6,500 ரூபாய்க்கான, டி.டி.,யை தபால் மூலம் அனுப்பினேன். ஆனால் அவை பல்கலைக்கழகத்தில் டெலிவரி செய்யப்படவில்லை. தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ரகுபதி, உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு ஏற்கனவே வேலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, முறையீட்டு வழக்காக மாநில தீர்ப்பாயத்துக்கு வந்துள்ளது. வேலூர் கோர்ட் அளித்த தீர்ப்பில், சற்றே மாற்றம் செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களின் அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர்கள், தமிழக போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆகியோர் இணைந்தோ, தனித்தோ, 8,000 ரூபாயை, இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், ஏற்கனவே மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த, இழப்பீட்டு தொகை, 5,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுத் தொகை, 1,000 ரூபாயை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment