பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் மாணவர்களை குழப்பும் வகையில் இடம்பெற்ற வினாவால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஏப்.,7ல் நடந்த அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், 14வது வினா, 'ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில், அந்த ஆடியின் வகை என்ன,' என்பது கேள்வி. இதற்கு, 'குழி, குவி, சமதளம்' என பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கேள்விப்படி, குவி அல்லது குழி என இரு பதில்களும் சரியானவை. ஆனால், இந்த கேள்வியை, 'ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் நேரான மாயபிம்பம் 1/3 எனில், அந்த ஆடியின் வகை,' என்று கேட்டிருக்க வேண்டும். இக்கேள்விப்படி, 'குவி' என்பது சரியான பதில். குறிப்பிட்ட இந்த கேள்வியை, மாணவர்கள் குழப்பமான மனநிலையில் தான் பதில் எழுதியுள்ளனர். எனவே, 'ஆன்சர் கீ'யில், இக்கேள்விக்கு, எது சரியான பதில் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள் இதனால் பாதிக்க வாய்ப்புள்ளது. விடைத்தாள் திருத்தும்போது தேர்வுத் துறை இக்குழப்பத்தை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment