ஆரணியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
ஆரணியில் இருந்து வெளியூருக்கு சென்று தேர்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் தபால் ஓட்டுப் பதிவு நடைபெற்றது. வாக்குகளை பதிவு செய்து அங்கு வைத்திருந்த பெட்டியில் போட்டனர். மேலும் இதில் ஓட்டு போடாத ஆசிரியர்கள் ஓட்டு போடவேண்டுமென்றால் செய்யாறிலுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு சென்று ஓட்டு போடவேண்டும் என்று ஆரணி வட்டாட்சியர் துரை.மணிமேகலை கூறினார்.
தபால் ஓட்டு போடுவதற்கு முன்பு வாக்குப் பெட்டி காலியாக உள்ளதா என்று அனைத்துக் கட்சி பிரமுகர்களும் பார்வையிட்டனர். அதற்கு பிறகு வாக்குப் பெட்டிக்கு சீல் வைத்து தபால் ஓட்டுப் பதிவு நடைபெற்றது.
செய்யாறில்...
செய்யாறு ஆர்.சி.எம். பள்ளியில் நடைபெற்ற வாக்குப் பதிவில் அதிமுகவைச் சேர்ந்த அரங்கநாதன், பாமகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில் வாக்குப் பெட்டி திறந்து காண்பிக்கப்பட்டு அவர்கள் முன்பாகவே வாக்குப் பெட்டிக்கு செய்யாறு உதவி தேர்தல் அலுவலர் எஸ்.சாந்தா, வட்டாட்சியர் ஜெ.சேகர் ஆகியோர் சீல் வைத்தனர்.
மாலை நடைபெற்ற வாக்குப் பதிவில், அரசு ஊழியர்கள் 406 பேர் தபால் வாக்குகளை வாக்குப் பெட்டியில் போட்டனர். செய்யாறு பகுதியில் பணிபுரிந்து வரும் 813 அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment