Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 April 2014

பார்வையற்றோர் வாக்களிக்க புதிய இயந்திரங்களில் சிறப்பு ஏற்பாடு

2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு புது வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடிக்கும் நேரம், ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு செய்யும் நேரம் என அனைத்தும் பதிவாகும் வசதி இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, வாக்களிக்கும் பொத்தானுக்கு அருகே கைகளால் தடவிப் பார்த்து அந்த பொத்தானின் வரிசை எண்ணை அறிந்து கொள்ள வசதியாக பார்வையற்றோர் பயன்படுத்தும் புள்ளிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிகளைக் கொண்டு பார்வையற்றோர் யாருடைய உதவியுமின்றி வாக்களிக்க முடியும்.
இந்த வசதி பழைய வாக்குப் பதிவு இயந்திரங்களில் இல்லாததால், பார்வையற்றோர் வாக்களிக்க தனியாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. ஆனால், தற்போது வரப்பெற்றுள்ள இந்த புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களிலேயே அந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார் படுத்த ஊழியர்கள் அதற்கானப் பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால், புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு பட்டனை அழுத்தினால் சில நிமிடங்களில் தானாக சுயபரிசோதனை செய்து கொண்டு தேர்தல் பணிக்கு தயாராகவிடும் வகையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment