Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 8 September 2014

பெற்றோர் ஆசிரியர் கழகம் விற்பனை செய்யும் பிளஸ்–2 வினா வங்கி புத்தகத்தில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு வினா– விடை புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.
அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் அவற்றை வாங்கி பயனடைந்து வருகின்றனர். சென்னையில் கல்லூரி சாலையில் ‘டி.பி.ஐ.’ வளாகத்தில் இந்த புத்தக விற்பனை நடைபெறுகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் விற்கப்படுகிறது. மாணவர்களுக்கு இது ஒரு வழி காட்டியாக அமைந்துள்ள இந்த புத்தகத்தில் பல்வேறு தவறுகள், குளறுபடிகளும் ஏற்பட்டுள்ளன.
பிளஸ்–2 இயற்பியல் வினா வங்கி புத்தகத்தில் 96–வது பக்கத்துக்கு அடுத்ததாக 97–வது பக்கம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக 129–ம் பக்கம் உள்ளது.
இதேபோல 160–வது பக்கத்திற்கு அடுத்ததாக 129–வது பக்கம் அச்சிடப்பட்டுள்ளது. பிளஸ்–2 தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான வினா புத்தகம் 2–வது பாகத்தில் 126–வது பக்கத்துக்கு அடுத்ததாக 111–வது பக்கம் இடம் பெற்றுள்ளது.
ஆனால் 127–வது பக்கம் இடம் பெற்றிருக்க வேண்டும். 126–வது பக்கத்திற்கு அருகாமையில் 143–வது பக்கம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற தவறுகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பக்க தொடர்ச்சி முழுமையாக இல்லாததால் எந்த பாடத்துக்கு எந்த கேள்வி என தெரியாமல் குழம்பியுள்ளனர். இந்த புத்தகத்தில் உள்ள தவறுகளை உடனடியாக சரி செய்து வெளியிட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ்–2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நேரத்தில் இத்தகைய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற அச்சுப்பிழைகளை சரி செய்து வெளியிட்டால் அது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment