Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 9 September 2014

TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.
இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment