Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 26 August 2014

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும்.
இந்த பதவிகளுக்கு ஆன்-லைனில் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஆன்-லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SSA - 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி


ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
கணிதப் பாடத்தில் கடினப் பகுதிகளை மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையாக கற்பிப்பது, புதுமையான கற்பித்தல் முறைகள் போன்றவை இந்தப் பயிற்சியில் ஆசிரியர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், கணித வல்லுநர்கள் ஆகியோர் கருத்தாளர்களுக்கு திங்கள்கிழமை வகுப்புகளை எடுத்தனர்.

முதல்கட்டமாக மாநில அளவிலும், அடுத்ததாக, மாவட்ட அளவிலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பயிற்சி வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பயிற்சியால் பாதிப்பா?

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியால் பள்ளியில் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக தலைமையாசிரியர்கள் புகார் கூறினர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

பள்ளிகளில் கற்பித்தல், கற்றல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை இரண்டு, மூன்று குழுக்களாகப் பிரித்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது போன்ற பயிற்சிகளின் மூலமே புதுமையான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதோடு, தங்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கல்வித் தரம் மேம்பட இதுபோன்ற பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என அவர்கள் தெரிவித்தனர்.

எம்.எட்.,படிப்புக்கு ஆக.,31ல் நுழைவுத்தேர்வு


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் முதுகலை கல்வியியல் படிப்புக்கு ஆக.,31ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 
எம்.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் ஆக.,18ம் தேதி வரை வழங்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுழைவுத்தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு, தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு


தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வுதேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கிறது.முதன்மைக் கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடனடியாக நிரப்ப வேண்டிய பணியிடங்கள் குறித்துகணக்கெடுக்கப்படுகிறது. இந்த நியமன நடவடிக்கையின் போது துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், இவற்றுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் அறிவிப்பு.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - தமிழகம் முழுவதும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு திறன் தேர்வு நாளை நடத்தவும், தேர்வு சார்பான அறிவுரைகள் வழங்கி திட்ட இயக்குனர் உத்தரவு

Wednesday, 20 August 2014

நல்லிணக்க நாள் உறுதிமொழி காலை 11மணிக்கு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

2014-15 - SSA - TENTATIVE CRC TIME TABLE

Primary                            Upper Primary
13.9.14                            13.9.14
11.10.14                          18.10.14
8.11.14                            22.11.14
13.12.14                          06.12.14

03.01.15                          24.01.15
21.02.15                          21.02.15

BRC Level Training
Sep 2-5,      Nov 25 to 28

UPPER PRIMARY
Oct 7-10

TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர்.


திண்டுக்கல்: ''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது: அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன. இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.--

தினமலரில் மற்றொரு பக்கத்தில் வந்த செய்தி...

''தமிழகத்தில் இந்த ஆண்டில், 12,588 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வித் துறைக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில், தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரி செய்ய வேண்டும்.

நான்கு ஆண்டுகளில், காலியாக இருந்த, 76,684 பணியிடங்களில், 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு, 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர்.

சலுகை மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு - தினகரன்


மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசிரியர் தேர்வில் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிவித்தது. இதை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. என்சிடிஇ மற்றும் டிஆர்பி.யில் 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். கடந்தாண்டு ஆக. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்த டிஇடி தேர்வு முடிவிற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி நடைபெற உள்ள நியமனதிற்கு தடை விதிக்க வேண்டும். வேலைவாய்ப்பக பதிவு மூப்பு, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவம் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மனு குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை செயலர், டிஆர்பி செயலர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து முடிவுகள் அமையும் என உத்தரவிட்டுள்ளார்.

வெயிட்டேஜ் முறையில் மாற்றக் கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது - தினகரன்


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டது. பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அரசு தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களே கட்ஆப்பில் தகுதி பெறுவதாக வருகிறது. அதனால் புதிய முறையிலான வெயிட்டேஜ் வேண்டாம் என பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

இந்த வெயிட்டேஜ் முறை மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மா வட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட 90க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் அடைத்தனர்.

தற்காலிக ஆசிரியர் தேர்வு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.


ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன. 

அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

*.உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.

*.ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

*.ஒவ்வொரு ஆண்டிலும் டிச.31ம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில்உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது.

*.எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்டஅலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின்அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

*.எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில்விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*.உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போது அனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்த விடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டுத் தான் செல்ல வேண் டும்.

*.உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பார்வையற்றோருக்கான ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசுக்கு கோரிக்கை- தினகரன்


பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்க பொது செயலாளர் பி.சுந்தரேசன் நேற்று அளித்த பேட்டி:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த மே 21ம் தேதி நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொண்ட பார்வையற்றவர்களை கொண்டு பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

குறிப்பாக தமிழை முதன்மை பாடமாக எடு த்து படித்து தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொண்ட பார்வையற்றவர்களை கொண்டு 94 பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், மாநகராட்சி பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட்ட துறை பள்ளிகள் (கள்ளர்), ஆதிதிராவிட நலப்பள்ளிகள், வனத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், மின்வாரிய பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களிலும் பார்வையற்றவர் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டு

முழுநேர பணிக்கு வற்புறுத்தல்; பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்.


திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில், முழுநேரம் பணியாற்ற வற்புறுத்துவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 

ஓவியம், இசை, தையற்கல்வி மற்றும் உடற்கல்வி சார்ந்த பாடங்களை, சிறப்பு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 நாட்கள்அவர்கள், கட்டாயம் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 543 பேர் பணியாற்றுகின்றனர். சில பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பள்ளிகளில் மருத்துவ காரணங்களுக்காக நீண்ட விடுப்பில், ஆசிரியர்கள் சென்றுவிடுவதால், மாதக்கணக்கில், அப்பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அங்கு மாற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி, "சிலபஸ்' முடிக்கின்றனர். போதிய ஆசிரியர் இல்லாத பட்சத்தில், பாடம் கற்பிப்பது தடைபடுகிறது.அவ்வாறான சில பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை, வகுப்பறையில் பாடம் நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். ஓரிரு ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடம் நடத்த முன்வந்தாலும், பகுதிநேர ஆசிரியர்களில் பலரும், அதை விரும்புவதில்லை. விருப்பமில்லாத ஆசிரியர்களை, பாடம் நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.உடற்கல்வி, தையல், ஓவியம், இசை போன்றவற்றில் மட்டுமே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளது; அவர்கள் வகுப்பறையில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களை நடத்துவதற்கு போதிய பயிற்சியோ, அனுபவமோ இல்லை. மாணவர்களுக்கு புரியும் விதமாக, அவர்களால் எளிதாக பாடம் கற்பிப்பதும் கடினம். பகுதிநேர பணிக்கு வரும் தங்களை, முழுநேர பணிசெய்ய வற்புறுத்துவதாக, சிறப்பு ஆசிரியர்கள் பலரும் புலம்புகின்றனர்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறல்


காளையார்கோவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கல்வித்துறை சார்ந்த பணிகளை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். காளையார்கோவில்
ஒன்றியத்தில் 141 துவக்க, நடுநிலைப் பள்ளிகள், 480 ஆசிரியர்கள் உள்ளனர். கண்காணிப்பாளர், இடைநிலை உதவியாளர், உதவியாளர்கள், தட்டச்சர், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவருகிறது.

14 பேர் பணிபுரிந்து வந்த இடத்தில் 4 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு மாதச்சம்பளப் பட்டியல் தயார் செய்வது, அரியர்ஸ், பி. எப் பிடித்தம் போன்ற தினசரி பணிகளும், பள்ளிகள் குறித்த புள்ளிவிபரம் மற்றும் நலத்திட்ட விபரங்களையும், கருவூல அலுவலகத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் தாயார் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. இங்கு சேகரிக்கும் புள்ளி விபரங்களை அனுப்பவும், கல்விதுறை சார்ந்த தகவல் மற்றும் அரசு உத்தரவுகளை தெரிந்துகொள்வதற்கு தனியார் கம்ப்யூட்டர் மையங்களை தேடிச்செல்லும் அவலநிலையில் உள்ளனர். ஊழியர் பற்றாக்குறை காரணமாக பணிகளை செய்யமுடியாமல் திணறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக ஆசிரியர்கள் அலுவலக பணியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உதவி தொடக்ககல்வி அலுவலகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், காளையார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஊழியர்களை நியமிக்கவேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.