Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 13 May 2014

12.67 லட்சம் மாணவர்களுக்கு 'கிரையான்ஸ்' வழங்க முடிவு

தமிழகத்தில், 12.67 லட்சம் மாணவர்களுக்கு, 'கிரையான்ஸ்' (வண்ண மெழுகு பென்சில்) வழங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும், மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில், 'கிரையான்ஸ்' பென்சில் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு பாக்சில், 16 வண்ண 'கிரையான்ஸ்' பென்சில்கள் இருக்கும். நடப்பாண்டு, 12.67 லட்சம் பேருக்கு, 'கிரையான்ஸ்' வழங்க, 2.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'கிரையான்ஸ்' சப்ளை செய்ய, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பிக்க, வரும் 19ம் தேதி, கடைசி நாள்.

No comments:

Post a Comment