பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணைத்தேர்வு எழுத, மே 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
அவரது உத்தரவு:
கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுத வராதவர்கள், வரும் ஜூன், ஜூலையில் நடக்கும், பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு எழுத, தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும், மே 12 முதல் 16 வரை, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென, தனி விண்ணப்பம் கிடையாது. தேர்ச்சி பெறாத, தேர்வு எழுத முடியாத ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; அதனுடன் இதரக் கட்டணம், 35 ரூபாயை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செலுத்த வேண்டும். இதுதவிர, 50 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு தேதி மற்றும், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி, பின் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment