Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 12 May 2014

அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி


இன்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி (அதே பள்ளியில் பணிப்புரிபவர்கள் மட்டும் மாறுதலுக்கு அனுமதித்தல்) அதே பள்ளியில்பணிபுரிபவர்கள் விருப்பின்மை தெரிவித்தால் ஒன்றியத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அலகு விட்டு அலகு மாறுதல் வழங்க இந்தாண்டு நடவ்டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment