Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 23 May 2014

பத்தாம் வகுப்பில் 90.7% தேர்ச்சி: மாநில அளவில் 19 பேர் முதலிடம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 19 மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை, 400-ஐ கடந்திருப்பது புதிய வரலாறு ஆகும்.
அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கு.தேவராஜ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
19 பேர் முதலிடம்; 125 பேர் இரண்டாம் இடம்; 321 பேர் முன்றாம் இடம்
தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.
சென்னைக்கு முதலிடம் இல்லை:
தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற 19 பேரில் ஒருவர் கூட தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர் இல்லை. அதிகப்படியாக தர்மபுரி மாவட்டத்தில், 9 பேர் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முதலிடம் பெற்றவர்களின் ஒரே ஒரு மாணவர் இடம் பெற்றுள்ளார்.
முதலிடம் பெற்றவர்கள் விபரம்:
1. அக்‌ஷயா, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி.
2. பஹிரா பானு, பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி.
3. தீப்தி, தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி.
4. தீப்தி, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.
5. காவ்யா, கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி.
6. கயல்விழி, தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி
7. கீர்த்திகா, கள்ளக்குறிச்சி வான்மதி மெட்ரிக் பள்ளி மாணவி.
8. கிருத்திகா, தர்மபுரி ஸ்ரீ விஜய்வித் மெட்ரிக் பள்ளி மாணவி
9. மகேஷ்லகிரு, பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி மாணவர்.
10. மைவிழி, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.
11. ரேவதி அபர்ணா, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.
12. சஞ்ஜனா, மதுரை எஸ்.டி.எச். ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி.
13. சந்தியா, எஸ்.இ. தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.
14. சந்தியா பி.எஸ், தூத்துக்குடி அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி.
15. ஷேரோன் கரிஷ்மா, அருப்புக்கோட்டை டாக்டர் ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி.
16. ஸ்ரீவந்தனா, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.
17. ஸ்ரீரத்தின மணி, விருதுநகர் சத்ரிய பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவி.
18. சுப்ரிதா.எம், தென்காசி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி.
19. வர்ஷினி, திருப்பூர் விவேகம் மெட்ரிக் பள்ளி மாணவி.
அரசுப் பள்ளி மாணவி சாதனை:
சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பஹிரா பானு, 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.
500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்த 321 பேரில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர் எஸ்.தனசேகர் இடம் பெற்றுள்ளார்.
இதேபோல், கரூர் மாவட்டம் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.சிவகார்த்திகா 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தேர்ச்சி விகிதம்:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7%. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது.
மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக முழுமதிப்பெண்கள் பெற்றவர்கள் விபரம்:
கணிதப் பாடத்தில் 18,682 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 69,560 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
3 பேர் 500-க்கு 500:
தமிழ் அல்லாத பிற மொழிப் பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதுரை டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்). பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு) ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைந்தது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.

No comments:

Post a Comment