Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 27 May 2014

பள்ளிகளை தாமதமாக திறக்க கோரிக்கை

கடும் வெயில் சுட்டெரிப்பதால் இந்தாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
கடும் வெயில் சுட்டெரிப்பதால் மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப சிரமமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிகளை காலதாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment