Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 28 May 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வீடுதோறும் பிரச்சாரம்.

தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடுதோறும் பிரச்சாரத்தில் ஈடுபட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இதனால் சில ஆண்டுகளாக அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு, ஆங்கில வழிக்கல்வி மற்றும் விலையில்லா புத்தகம், நோட்டு, புத்தக பை, சீருடை, காலணி ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு துவக்கப்பள்ளகளில் ஆங்கில வழி கல்வி மற்றும் அரசு தரும் விலையில்லா பொருட்கள் குறித்து விவரங்களை பெற்றோர்களுக்கு துவக்க பள்ளி ஆசிரியர்கள் மூலம் கொண்டு சென்று அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை இந்தாண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. குறிப்பாக நகர் பகுதிகளில் உள்ள பல அரசு துவக்கப் பள்ளிகளில் மிகவும்சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர்.தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் நோட்டீஸ்கள் வழங்கி வந்தோம்.
இந்தாண்டு முதல் தங்கள் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு துவக்கப்பள்ளிகளில் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பிரச்சாரம் செய்து மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மேலும் ஆங்கில வழி கல்வி மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் குறித்து விளம்பர பலகை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment