தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளியில் 1,35,00,000 மாணவர்கள் படித்து கொண்டு வருகின்றனர். எனினும் தொடக்கப்பள்ளியில் படிப்பை பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை 1.5 சதவீதமாக உள்ளது.
நடுநிலை மற்றும் உயர்நிலைபள்ளியில் இது 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 100 சதவீத மாணவர் சேர்கையே அரசு பள்ளிக்கு இலக்கு,ஆனால் 36 சதவீதத்தை இன்னமும் எட்டபடவில்லை. மாணவர் வருகை குறைவால் தமிழகத்தில் 1200 பள்ளிகள் இழுத்து மூடும் அபாயத்தில் உள்ளது, 50க்கும் மேற்பட்ட சென்னை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விரல்விட்டும் எண்ணும் நிலையில் உள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் வசித்த குடிசைவாழ் மக்கள் ஓக்கியம், துரைபாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி, திருமழிசை ஆகிய இடங்களுக்கு குடியேற்றப்பட்டனர். போதிய கல்வி வசதி கிடைக்காததால் இவர்களில் 8,000 குழந்தைகள் படிப்பை பாதியிலே கைவிட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுபள்ளி மாணவர்களுக்கு காலனி முதல் மடிக்கணினி வரை 12 வகையான இலவச பொருட்கள் மற்றும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆனாலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து மாணவர் சேர்க்கை இயக்கத்தை இம்மாத இறுதிவரை தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment