Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 4 September 2014

நோஞ்சானாக வைக்கப்பட்டிருக்கும் உடற்கல்வி

அண்மையில் நிறைவடைந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்குத் தலா ரூ.30 லட்சமும் காசோலை வழங்கி தமிழக முதல்வர் பாராட்டியதை அனைத்து ஊடகங்களும் பிரமாதமாக வெளியிட்டிருந்தன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கதே. விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க, முன்னுரிமை அளிக்கப்படுகிறது என மக்களை நம்பச் செய்வதற்காக பல்வேறு காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
ஆனால் உண்மையில் விளையாட்டுத் துறை மிகவும் நோஞ்சானாகவே இருக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிரிக்கெட் போட்டி ஐபிஎல் என்ற வர்த்தகச் சூதாட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பதால் அந்த விளையாட்டு படும்பாடு தனிக் கதை. இது தவிர தனித் திறன் சார்ந்த விளையாட்டுகளில் ஒருசிலர் பிரகாசித்து வருகின்றனர். இதுவும் கூட வசதி படைத்தவர்களின் வாய்ப்புக்குரியதாக இருக்கிறது. ஒருசில சாமானியர்கள் மட்டுமே அரிதாக மேலே வர முடிகிறது.ஆனால் ஒட்டுமொத்தமாக விளையாட்டுத் துறை மேம்பட வேண்டுமென்றால் கீழ்மட்டத் தில் இருந்தே முயற்சியும், பயிற்சியும் தொடங்கப் பட வேண்டும்.
அனைத்து நிலைகளிலும் இதை வளர்த்தெடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களை மதிப்பெண் பெறும் இயந்திரங் களாக மாற்றப்படாமல், அவர்களது விளை யாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தி, வளர்த்தெடுத் தால்தான் சிறப்பான மாற்றத்தைத் தொடங்கி வைக்க முடியும்.தமிழகத்தில் உள்ள 8 ஆயிரத்து 200 அரசுநடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் உள்ளஅரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மூன்றாண்டு களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கின்றன என தகவல்கள் வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விளையாட்டுத் திறனை வளர்த் தெடுக்கவும் வித்திடப்படும் இடமாக பள்ளிக்கல்வியில், உடற்கல்விக்கு முக்கியப் பங் குண்டு. ஆனால் உடற்கல்விக்கு அரசு தரும் முக்கியத்துவம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.கல்வி என்பதே மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவுத்திறனுடன், உடல் மற்றும் மனவளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதும் ஆகும்.
ஆனால் இங்கு வர்த்தகப் போட்டியில் ஜெயிக்கவேண்டிய பந்தயக் குதிரைகளாக, மாணாக்கர் களை மாற்றக்கூடிய கல்வி முறையில் உடற்கல்விக்குரிய முக்கியத்துவம் புறக்கணிக்கப் படுகிறது. கல்வி, சுகாதாரத்திற்கான சமூகப் பொறுப்புகளை அரசுகள் கைகழுவ வேண்டும் என்ற விரிவான தாராளமய தாக்குதலின் ஒரு பகுதியாகவே இதைக் காண வேண்டியிருக்கிறது. எனவேதான் தாராளமயத்தின் விசுவாசிகளாக செயல்படக்கூடிய ஆட்சியாளர்கள் உடற்கல்வி ஆசிரியப் பணியிடங்களைக்கூட பல ஆண்டு காலமாக நிரப்பாமல் விட்டு வைத்திருக்கின்றனர். இப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கையும், போராட்டமும் சில ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையின் நல்ஆரோக்கியத்திற்கு அவசியமும் கூட!

No comments:

Post a Comment