Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 7 September 2014

பயிற்சிகளில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்த்தும் வகையில், பல்வேறு பயிற்சிகளை, கல்வித்துறை வழங்க முன்வந்தாலும், அதில் கலந்து கொள்ள பெரும்பாலான, ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி திட்டமும், ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பு வரை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமும், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுதல், பாடவாரியாக ஆசிரியர் நியமனம், ஆசிரியர்களுக்கு பயிற்சி என, பல செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதில் சமீப காலமாக உலக அளவில் மாணவர்களை மேம்படுத்தப்பட்ட கல்வி முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பலவித புதிய, 'லேர்னிங் மெத்தெட்' அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், வகுப்பறைக்கு செல்லாமல் தடைபடுவதால், அரசு பள்ளிகளின் தரம் உயர்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. பயிற்சி என்றாலே, ஆர்வம் காட்டாமல், அதை புறக்கணிக்க என்ன காரணம் சொல்லலாம் என, அலைமோதும், அரசு பள்ளி ஆசிரியர்களின் போக்கு, கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆகியவை வந்த பின், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அனைத்து அரசு பள்ளிகளிலும், உள்கட்டமைப்பு வசதி, கற்றல் உபகரணம், பள்ளி சூழல் உள்ளிட்டவை மாறியுள்ளன. அதே போல், செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை, கணித உபகரணங்களை கொண்டு, கணிதப்பாடத்தை எளிமையாக கற்றுத்தரும் முறை என பலவித புதிய கல்விமுறை, சர்வதேச தரத்துடன் அறிமுகப்படுத்தப்படுகிறது
இதற்காக, ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு, 10 நாட்களுக்கும் மேல் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்சி பெற்றதை வகுப்பறைக்கு கொண்டு செல்வதேயில்லை. இதனால், தன் வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால், பயிற்சி பெற்ற முறைகளை, பயிற்சி முடியும் போதே, மறந்துவிடுகின்றனர். இதனால், பயிற்சிக்கு
வருவது என்றாலே, வேப்பங்காயாக, ஆசிரியர்களுக்கு கசக்கிறது. பயிற்சியில் குறைந்தது, 20 சதவிகித ஆசிரியர் ஆப்சென்ட் ஆகிவிடுகின்றனர். இதற்கு, உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களையும், சான்றிதழ்களையும் சமர்பிக்கின்றனர். இதனால், அரசு சார்பில், பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள உபகரணங்களும் எவ்வித உபயோகமும் இல்லாமல் வீணாகிவருகிறது.
ஆசிரியர்களின் இந்த அலட்சிய போக்கால், மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி, எவ்வித பயனும் இன்றி, விரயமாக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் இல்லாத தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் இருந்தாலும், அவர்களிடம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு கற்றுத்தரும் ஆர்வம் இல்லாமல் இருப்பதால், அரசு பள்ளியின் தரம் உயர்வதில், தடங்கல் இருந்து வருகிறது. இந்நிலை மாற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment