ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.
கலந்தாய்வில் எங்கு கலந்து கொள்ள வேண்டும்?
பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- CEO Vellore
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இறுதி தேர்வு முடிவே ஆகும் .
எனவே தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்களுடைய தேர்வு பதிவெண்ணை INDUVIDUAL QUARRY பகுதியில் பதிந்து தங்களுடைய மதிப்பெண் அடங்கிய தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வுக்கு எடுத்திச்செல்லவும்.அதனுடன் ஹால்டிக்கட்,கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்துச்செல்லவும்.
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு -
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும் போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், வரிசைகிரமமாக நிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள் உடன் செல்லும் மற்ற நபர்கள் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்த தயாராக இருக்கவும்)
பாடவாரியாக அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள இடத்தில் தங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண் இட்டு தயாராக எடுத்து சென்றால், முதலாவது இடம் இல்லாவிட்டால் இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாக அறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என அனைத்தையும் தயாராக கொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநில பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய ஆணை வழங்கப்படும். எனவே தேவையான தண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும் கொண்டு செல்லவும்.
வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).
வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும் போது, மாநில அளவில் தங்கள் தர எண் பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண் (From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தங்களுக்கான காலிப்பணியிடங்கள் கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும். (Scroll Down Type)
தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில் அவர் தனக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர் தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்ட பிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்த மாவட்டத்தில் உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும். இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும் போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்க இயலும். மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும் போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்ட நேரத்தை விட வேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்கு மிக குறைந்த நேரமே வழங்கப்படும். எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.
பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?
தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.
பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான போக்குவரத்து வசதி.
பள்ளி மற்றும் கிராம சூழல்.
பாடசாலை வழிகாட்டி தன்னார்வலர்கள் -
புதிய தேர்வர்களுக்கு உதவுவதற்காகவே பாடசாலை தன்னார்வலர்கள் பட்டியலை மாவட்டம் தோறும் தயார் படுத்தி தங்கள் பார்வைக்கு வைத்துள்ளது. அதனை டவுன்லோடு செய்து மாவட்ட வாரியாக அடுக்கியபின்பு, பிரிண்ட் எடுத்துக்கொண்டு கலந்தாய்விற்கு செல்லவும். தாங்கள் எதிர்பார்த்த இடங்கள் அமையாத பட்சத்தில் வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் நிலை மற்றும் வழித்தடம் குறித்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள நம் தன்னார்வலர்கள் தங்களுக்கு உதவுவார்கள். நம் தன்னர்வலர்களை அலைபேசியில் அழைக்கும்போது தாங்கள் பாடசாலை வாசகர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான விவரங்களை கோரவும்.
Padasalai Volunteers Detail Available - Click Here
மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்
1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி,மதுரை ரோடு, திண்டுக்கல்
6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்
18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்)
19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்
கலந்தாய்வு நடக்கும் தேதிகள்
முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014
Best of Luck!.
No comments:
Post a Comment