

உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Tuesday, 29 October 2013
அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணி!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1300 பேருடையை சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகளவில் ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனம், அனுமதி சேர்க்கைக்கு புரோக்கர்கள் மூலம் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா மே.16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. சட்டத்திருத்த மசோதாவிற்கு அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 13500 ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர், ஊழியர்ககளுக்கு ஏப்ரல் மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஊழியர்களின் பணி நியமனத்தில் நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்கள் பெறப்பட்டு அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உண்மை தன்மை கண்டறிந்து சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்களை அனுப்பியுள்ளது. மேலும் 8-ம் வகுப்பு பயின்றவர்கள் நேரடியாக திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று தனிஅலுவலர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றுபவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அதுகுறித்தும் அரசால் நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சிதம்பரம் நகரில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி,சேத்தியாத்தோப்பு பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்றதாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவை போலியானவை என சான்று பெறப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொலைநிலை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறிய விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 1300-க்கும் மேற்பட்டோரின் சான்றுகள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பணியில் சேர்ந்துள்ள எந்த ஒரு ஆசிரியர், ஊழியரையும் வேலையிலிருந்து நீக்குவதையும், ஊதியத்தை குறைப்பதையும் ஏற்க மாட்டோம். அப்படி நடைபெற்றால் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்குவோம். அதே நேரத்தில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை போகாது, தலையிடாது என சி.மதியழகன் தெரிவித்தார்.
Monday, 28 October 2013
"சிறப்பாக செயல்படும் சத்துணவு மையங்களுக்கு சான்றிதழ்"
திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படும் என்றார் சத்துணவுத் திட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ப. குமார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்ட கண்காணிப்பு மற்றும் ஊக்குவிப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதற்கு முன் அதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் வாங்கப்படும் அரிசி தரமானதாக, புதிதாக இருக்க வேண்டும்.
சமையல் அறை தூய்மையாக இருக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சத்துணவு ஒருங்கிணைப்பாளர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் குமார். கூட்டத்தில் ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசும்போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அருகே குறுகிய காலத்தில் வளரும் கீரை வகைகள், காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1527 சத்துணவு மையங்களில் 2 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவதாகவும், புகையைத் தவிர்க்க முதல் கட்டமாக 238 மையங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ஜி. சிற்றரசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அ. தமீமுன்னிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE - நாளை முதல் (29.10.2013) - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என
பாம்புகள் வலம் வரும் பெண்கள் உயர்நிலை பள்ளி கழிவறை
நேதாஜி ரோட்டிலுள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில், கழிவறைக்குள் அடிக்கடி பாம்பு வருவதால் மாணவியர் அச்சமடைந்து வருகின்றனர்.இப்பள்ளியின் கழிவறை, பள்ளியின் பின்புறம் அமைந்துள்ளது. சுற்றுப்புறம் பராமரிப்பில்லாமல், புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. கழிவறைக்குள் அவ்வப்போது பாம்புகள் "விசிட்' அடிப்பதால் மாணவிகள் உள்ளே போகவே பயப்படும் நிலை உள்ளது.
மாணவியர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களில் இரண்டு, மூன்று முறை கழிவறைக்குள் பாம்புகள் வந்து விட்டன. கடந்த வாரம் ஆசிரியைகள் சேர்ந்து ஒரு பாம்பை அடித்துக் கொன்றனர். பாம்பு பயத்தால்
கழிவறைக்குள் செல்லவே
பயமாக உள்ளது. இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். கழிவறையும் பராமரிப்பில்லாமல் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. பல சிரமங்
களுக்கு இடையில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசுப்பள்ளிக்கு வருகிறோம். அடிப்படை தேவையான கழிவறை கூட இல்லாததால், நாங்கள் படும் பாட்டை வெளியில் சொல்ல முடியாது. பல நேரங்களில் அண்டை வீடுகளுக்கு சென்று கழிவறையை உபயோகித்து வருகிறோம். எங்களின் சிரமங்களை புரிந்துகொண்டு, தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாணவியர் கூறினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
மாணவியர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களில் இரண்டு, மூன்று முறை கழிவறைக்குள் பாம்புகள் வந்து விட்டன. கடந்த வாரம் ஆசிரியைகள் சேர்ந்து ஒரு பாம்பை அடித்துக் கொன்றனர். பாம்பு பயத்தால்
கழிவறைக்குள் செல்லவே
பயமாக உள்ளது. இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். கழிவறையும் பராமரிப்பில்லாமல் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. பல சிரமங்
களுக்கு இடையில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அரசுப்பள்ளிக்கு வருகிறோம். அடிப்படை தேவையான கழிவறை கூட இல்லாததால், நாங்கள் படும் பாட்டை வெளியில் சொல்ல முடியாது. பல நேரங்களில் அண்டை வீடுகளுக்கு சென்று கழிவறையை உபயோகித்து வருகிறோம். எங்களின் சிரமங்களை புரிந்துகொண்டு, தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாணவியர் கூறினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
நாமக்கல் அரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியைகள் மீது போலீஸ் வழக்கு
நாமக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்த ஆசிரியைகள் ஜமுனாராணி (42), லதா(48) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் லதா 8ம் வகுப்புக்கு ஆசிரியையாக உள்ளார்.
கடந்த 22ம் தேதி 8ம் வகுப்பு மாணவர் நவீனை நோட்டு வாங்கி வரும்படி கணக்கு ஆசிரியை ஜமுனாராணி அனுப்பியுள்ளார். மாணவரிடம் ஜமுனாராணியை, லதா திட்டியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு லதா, ஜமுனா ராணியை கன்னத்தில் அறைந்து விட்டார். சக ஆசிரியர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு, உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி இரு ஆசிரியைகளுக்கும் அறிவுரை வழங்கினார்கள். ஆனால் மறுநாளும் இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று, ஆசிரியை லதா, ஜமுனா ராணி தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் ஜமுனாராணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து ஆசிரியை ஜமுனாராணி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தன்னை லதாவும், அவரது கணவர் ரவியும் பள்ளிக்கு வந்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.
இதன்பேரில் லதா, அவரது கணவர் ரவி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு கூறுகையில், ‘‘அரசு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் பணியாற்றி ஏழை மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். ஆனால், இரு ஆசிரியைகளையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தபிறகும், அவர்கள் தங்களது பிரச்னையை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. காவல்துறையின் நடவடிக்கையை பொறுத்து, இரு ஆசிரியைகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப் படும்’’ என்றார்.
குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட 25 பணியிடங்களில் பட்டதாரிகளை பணி அமர்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தியது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1,372 பேரை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1,372 பேருக்கு மெயின் தேர்வு கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு 14 மையங்களில் நடந்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் பொதுஅறிவை சோதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தும் கட்டுரைகளாக பதில் அளிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்வை 84 சதவீதம் பேர் மட்டுமே எழுதினார்கள். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதியது அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த தேர்வு விடைத்தாள்கள் எப்படி மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
2 முறை மதிப்பீடு செய்யப்படும்
தேர்வு விடைத்தாள்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அழைத்து அவர்கள் மூலம் இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மதிப்பீடு ஒரு முறை மட்டுமல்லாமல் 2 முறை மதிப்பீடு செய்யப்படும். குரூப்-1 மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் குரூப்-1 அதிகாரிகள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி மாநகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைப்பு
திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 இடங்களில் தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை, மதுரை
புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இருந்து வரும் பஸ்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து, தலைமை தபால் நிலையம், ஜங்சன் வழியாக காதிகிராப்ட் கிழக்குபுறத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு விராலிமலை ஜங்சன், மன்னார்புரம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து வரும் பஸ்கள் விராலிமலை ஜங்ஷன், அரிஸ்டோ ரவுண்டானா, கோரிமேடு வழியாக பெரியமிளகுபாறையில் (கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி அருகில்) உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு பெரியமிளகுபாறை, கோரிமேடு, அரிஸ்டோ ரவுண்டானா, விராலிமலை ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
கோவை, சென்னை
கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதியில் இருந்து வரும் பஸ்கள் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு திரும்ப செல்ல வேண்டும்.
சென்னை, சேலம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து, தலைமை தபால் நிலையம், வ.உ.சி. சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின் வில்லியம்ஸ் சாலை, முத்தரையர் சிலை, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல், பழனி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் காவல் சோதனை சாவடி-1, கருமண்டபம், கோரிமேடு, வ.உ.சி. சாலை வழியாக மத்திய பஸ் நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின் ராஜாஜி சாலை பெரியமிளகுபாறை, கோரிமேடு, கருமண்டபம், காவல் சோதனை சாவடி-1 வழியாக செல்ல வேண்டும்.
மாநகர பஸ்கள்
வ.உ.சி. சாலையில் மத்திய பஸ் நிலைய நுழைவு வாயிலுக்கு அடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு ரோஷன் மகால் வழியாக சங்கம் ஓட்டல் சாலையை அடைந்து, வெஸ்ட்ரி பள்ளி வழியாக செல்ல வேண்டும். மற்ற ஆம்னி பஸ்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைத்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப மட்டும் ஆம்னி பஸ்கள் வ.உ.சி. சாலைக்கு செல்ல வேண்டும்.
மாநகர பஸ்கள் அனைத்தும் வழக்கமாக செல்லும் வழித்தடங்களில் சென்று வர வேண்டும். அரசு பஸ்கள் இயக்கப்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் தங்களுக்கு உண்டான பணிமனைகளில் நிறுத்தி வைக்க வேண்டும். மற்ற கோட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைத்து கொண்டு தேவையான நேரத்திற்கு மட்டுமே மத்திய பஸ் நிலையத்திற்குள் வர வேண்டும். மத்திய பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் எந்த பஸ்சையும் நிறுத்தி வைக்க அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)