Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 15 July 2014

சிறுபான்மையின மாணவ மாணவிகள் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் தகவல்


திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ–மாணவிகள் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:–

கல்வி உதவித்தொகை
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பாலிடெக்னிக், பட்டயபடிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர், முஸ்லிம், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014–2015–ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்குwww.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியதற்கு 15–9–2014 மற்றும் புதுப்பித்தலுக்கு 10–10–2014 வரை வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்–பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ–மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்வி கட்டணம் செலுத்தி ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் வருகிற செப்டம்பர் மாதம் 25–ந்தேதிக்குள் புதியதற்கும், அக்டோபர் மாதம் 20–ந்தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி கிளை குறியீடு பதினொரு இலக்கு எண்களை தவறாது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். கல்வி நிலையங்கள் இணையதளம் மூலம் மாணவ–மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து, தகுதி பெற்ற விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்.

வேண்டுகோள்
அந்த படிவங்களில் கையொப்பமிட்டு, அத்துடன் அனைத்து சான்றாவணங்களையும் அக்டோபர் மாதம் 5–ந்தேதிக்குள் புதியதற்கும், அக்டோபர் மாதம் 31–ந்தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் கலெக்டர் அலவலுகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் தவறாது சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ–மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment