Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 14 November 2013

17ம் தேதி புதிய தபால் தலை வடிவமைப்பு போட்டி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு


 திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான புதிய தபால் தலை வடிவமைப்பு போட்டி 17ம் தேதி நடக்கிறது. போட்டி திருச்சி மற்றும் லால்குடியில் நடக்க உள்ளது.
தபால் தலை வடிவமைப்பு இந்திய அஞ்சல் துறையில் 1998 முதல் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான முக்கிய கலைகளில் ஒன்றாக இது இடம் பெற்றுள்ளது. இப்போட்டி “குழந்தைகள் தினத்தை“ பள்ளி குழந்தைகள் சிறப்பாக கொண்டா டும் வகையில் நாடெங்கும் நடத்தப்படுகிறது.இப் போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சியில் ஈ.ஆர்.மேல் நிலைப்பள்ளியில் காலை 11மணி முதல் 12மணி வரை நடை பெறும்.
தேசிய அளவில் பரிசு பெறும் வடிவமைப்புகள் தபால் தலைகள், முதல் நாள் உறை, மினியேச்சர் தாள் ஆகியவை இந்திய அஞ்சல் துறையில் அச்சிடப்படும் வாய்ப்பு உள்ளது. போட்டி யில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது வடிவமைப்புகளை சுயமாக தாங்களாகவே வரைய வேண்டும். வரைவதற்கு எல்லாவிதமான வண்ணப் பொருட் களையும் பயன்படுத்தலாம். அவற்றை அவர்களே கொண்டு வர வேண்டும். வரைவதற்கான காகிதம் அஞ்சல் துறையால் வழங்கப்படும். பங்கேற்பவர்கள் 3குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு 1ல் 1ம் வகுப்பு முதல் 4ம்வகுப்பு வரையிலும், குழு 2ல் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும், குழு 3ல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் உள்ள மாணவ, மாணவிகள் பிரிக்கப்படுகின்றனர். 
இந்த போட்டியில் “என் தாத்தா பாட்டியுடன் ஒரு நாள்“ என்ற தலைப்பில் வடிவமைப்புகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுக்களுக்கும் தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை முதல் பரிசு  3 பேருக்கு தலா ரூ10,000, 2ம்பரிசு 3 பேருக்கு தலா ரூ.6,000, மூன்றாம் பரிசு 3பேருக்கு தலா 4,000 வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருச்சி தபால் கோட்ட அலுவலகத்தை 0431-2414149, 2466260, 2466249 என்ற எண்களில் தொடர்பு கொள் ளலாம். இதனை திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment