Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 2 November 2013

ஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 சதவீதம் முடிவு

கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, ரத்த வகை, பயிலும் பாடப்பிரிவு உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

தேர்வு நேரங்களின் போது, ஏற்படும் சில குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள, பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவேற்றும் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,400 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இப்பணி நடந்து வருகிறது.இப்பள்ளிகளில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 854 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 4 லட்சத்து 54 ஆயிரத்து 385 பேரின் விவரங்கள் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 52 ஆயிரத்து 469 பேரின் விவரங்கள் படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் 80 சதவீதம் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளும் பதிவு செய்ய வேண்டியுள்ளதால், சர்வே கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment