Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 23 November 2013

மாணவர்களின் விவரத்தை கணினியில் சேகரிக்க ஒப்பந்த பணியாளர் நியமனம் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை



 தேர்தல் மற்றும் வருவாய்த்துறை பணிகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்வதை போல் மாணவர்களின் விபரத்தை கணினியில் பதிவு செய்ய ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் நாங்கு நேரி வட்டாரத் தலைவர் ஜோசப்ராஜ், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் புள்ளி விபரங்களை கடந்த கல்வி ஆண்டு முதல் கணினியில் ஏற்றும் பணி நடந்து வரு கிறது. அதே புள்ளி விபரங்களில் தற்போது தேவை யான திருத்தங்களை மேற் கொள்ள வட்டார வளமையத்தின் மூலம் புதிய மென் பொருள் அடங்கிய குருந்தகடு அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது.
ஆனால் தொடக்கக் 
கல்வித்துறையின் கீழுள்ள 
பள்ளிகளில் கணிணி வசதி இல்லாததால் தனியார் கணினி மையங்களுக்கு சென்று விபரங்களை ஏற்ற வேண்டியுள்ளது. உரிய வழிமுறைகளின்றி பல ஆசிரியர்கள் தெரிந்த வரைக்கும் ஆதார் எண், புகைப்பட அளவு மாற்றம் போன்றவற்றை ஆசிரியர்கள் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
மென்பொருள்களுக் கான பாஸ்வேர்டுகள் தெரியாமல் பல ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது மீண்டும் அதே பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் கணினி யில் மாணவர்களின் விபரங்களை ஏற்ற ஒரு மாண வருக்கு ரூ.15  வரை செலவா கிறது. 
இந்த பணிகளில் ஈடு படும் போது ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இரு ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
எனவே தேர்தல் மற்றும் வருவாய்த்துறைப் பணிகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற் கொள்வதைப் போல மாணவர் புள்ளி விபரங் களை கணினியில் பதிவேற் றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment