சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய போலி ஆசிரி யர்கள் குப்பன், ராஜா, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
1998ம் ஆண்டு இவர்கள் போலிச் சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந் துள்ளனர். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள முரு கன், பிளஸ்2 மற்றும் ஆசிரி யர் பயிற்சி சான்றிதழ்களை ரூ.30 ஆயிரத்துக்கு வாங் கியுள்ளார். பட்டதாரிக ளான மற்ற 2 ஆசிரியர் களும் இதேபாணியில்தான் சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.திருவண்ணாமலை அருகே உள்ள துரிஞ்சா புரத்தில் இருந்து பெயர் தெரியாத ஒருவர், சென்னை மாநகராட்சிக்கு எழுதிய மொட்டைக் கடிதமே, இவர் களின் ஆசிரியர் பணிக்கு வேட்டு வைத்துள்ளது.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்த 58 ஆசிரியர்க ளையும் போலீசார் கண் காணித்தனர்.
இவர்கள் பணியில் சேரும்போது கொடுத்த ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில் பெரும்பாலான வர்களின் சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 8 பேர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்க ளில் 3 பேர் சிக்கியுள்ள நிலையில் மற்ற 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த போலிச் சான்றி தழ் தயாரிப்பதை 1998ம் ஆண்டில் ஒரு கும்பல் தொழிலாக செய்து வந்துள் ளது.
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் அருகில் முகாமிட்டு மோசடிக் கும் பல் இப் பணியை செய் துள்ளது.வாலாஜாபாத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவ ரும், இந்த மோசடிக் கும்ப லில் இடம் பெற்றிருந்துள் ளார். அவரிடம்தான் சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் போலிச் சான்றிதழ்களை வாங்கியிருப்பது விசாரணை யில் தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தி மற் றும் அவரது கூட்டாளிக ளும் இந்த வழக்கில் விரை வில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பிடிபட்டால் தான் போலிச் சான்றிதழ் விவகாரத்தில் மேலும் தக வல்கள் வெளியாகும்.
No comments:
Post a Comment