முதல்வர் பாராட்டிய எஸ்.எம்.எஸ்., திட்டம் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழையாமையால் கடலூர் மாவட்டத்தில் தேய்வடைந்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் 1,215 தொடக்கப் பள்ளிகள், 117 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 177 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,449 பள்ளிகள் உள்ளன.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதால் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டம் பின் தங்கிய நிலையிலேயே <உள்ளது.
இதற்கு அடிப்படையில் உள்ள தொடக்கக் கல்வியில் Œரியான முறையில் மாணவர்களுக்கு பாடம் @பாதிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு காரணமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருகை தராமல் இருப்பது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தன.
அதனைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்கள் வருகையை காலையில் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் நிக் நெட் பிரிவுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட வேண்டும் என்ற திட்டத்தை அப்போது கலெக்டராக இருந்த அமுதவள்ளி கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி முதல் அமல்படுத்தினார்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை காலை 10:00 மணிக்கு எஸ்.எம். எஸ்., மூலம் தகவல் அனுப்ப வேண்டும்.
இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டŒபையில் இத்திட்டத்தை பாராட்டியதோடு அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றுமாறு கூறினார்.அதன்படி சில மாதங்கள் தலைமையாசிரியர்களால் எஸ்.எம்.எஸ்., கொடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிக்கு வருகை தராமலேயே, வழியில் இருந்தே எஸ்.எம்.எஸ்., கொடுத்து சிக்கிக்கொண்ட தலைமையாசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.தற்போது கல்வித்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால் ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் இத்திட்டத்தை கைவிடத் துவங்கியுள்ளனர்.இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 259 பள்ளிகளும், செப்டம்பர் மாதம் 124 பள்ளிகளும், அக்டோபர் மாதம் 226 பள்ளிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., கொடுத்துள்ளன.இதனால் மீண்டும் ஆசிரியர்கள் பழைய நிலைக்கே சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment