Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 21 November 2013

போலி ஆசிரியர்கள் விவகாரம் சான்றிதழ் தயாரித்து கொடுத்த ஆசாமி யார் என தெரிந்தது




போலி ஆசிரியர்களுக்கு பணியில் சேர ஆவணம் தயார் செய்து கொடுத்த ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பணியாற்றிய விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஸ்வ ரூபம் எடுத்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியபோது குப்பன், ராஜா, முருகன் ஆகிய 3 போலி ஆசிரியர்கள் பிடிபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர்.பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த முருகன் பிளஸ் 2 சான்றிதழையும், ஆசிரியர் பயிற்சி சான்றிதழையும் 30 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குப்பன் 25 ஆயிரம் கொடுத்தும், ராஜா 15 ஆயிரத்துக்கும் போலி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களை வாங்கி இருக்கின்றனர். 

இவர்கள் இருவரும் பட்டம் படித்தவர்கள். 2011ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு திருவண்ணாமலை அருகே உள்ள துரிஞ்சாபுரத்தில் இருந்து மொட்டைக் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் 58 ஆசிரியர்களின் பெயர், முகவரி, அவர்கள் பணிபுரியும் பள்ளி ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களில் பெரும் பாலானவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் கடிதத்தில் இடம் பெற்றிருந்தது.மாநகராட்சி அதிகாரிகள், அதுபற்றி விசாரிக்க மாநகராட்சி விஜிலென்ஸ் கமிட்டிக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 58 ஆசிரியர்களின் பட்டியலும் பள்ளி கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கல்வி துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் சில ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷ னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி குப்பன், ராஜா, முருகன் ஆகிய போலி ஆசிரியர்களை கைது செய்தனர். ஆசியரியர்களுக்கு போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்தவர் வாலாஜாபாத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடுகின்றனர். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment