Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 14 November 2013

குழந்தைகளைக் கொண்டாடுவோம்


தமிழகத்தின் பிரபல எழுத்தா ளர் ஒருவர் குழந்தைகள் மத்தியில் பேச ஒரு பள்ளிகூடத்திற்கு அழைக் கப்பட்டிருந்தார். 6ம் வகுப்பு குழந் தைகள் மத்தியில் அவர் பேசிக் கொண்டிருந்த போது,இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்து லட்சுமி என்ற தகவலை சொன் னார். உரையாற்றி முடித்த பின் கலந்துரையாடும் போது ஒரு பெண் குழந்தை மெதுவாக எழுந்தது, “முதல் பெண் மருத்துவர் முத்துலட் சுமி என்றீர்களே, அதற்கு முன் னால் எந்த பெண்ணும் இந்தியா வில் மருத்துவம் பார்க்கவே இல் லையா? வீடுகளில் மருத்துவம் பார்த்த பாட்டிகள் எல்லாம் மருத்து வர்கள் கிடையாதா?” என்று கேள்வி எழுப்பியது.
இப்படி நம்மை அதிர வைக்கின்ற, ஆச்சரியப்பட வைக் கின்ற கேள்விகளை குழந்தைகள் எளிதாக எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் அவற்றை எளிதாகக் கடந்து கொண்டே இருக்கிறோம், குதூகலமும் உற்சாகமும் படைப்பாக்கமும் நிரம்பி வழிகின்ற உலகம் குழந்தைகளுடையது. குழந் தைப்பருவம் மனித வாழ்வில் எதிர்கால வாழ்க்கைக்கான தயா ரிப்பு அல்ல. உண்மையான, பிரகாச மான, சுயமான, திரும்பிவராத ஒரு வாழ்க்கையாகும்.மூன்று வயதிலிருந்து பத்து வயதிற்குள் தான் மனிதப்பண்பு, சிந்தனைத் திறன், பேச்சு, ஆகி யவை உருவாகின்றன.
இந்த வயது குழந்தைகள் ஒரு நடுத்தர வயது டைய மனிதரைக் காட்டிலும் மிகக் கூடுதலான வார்த்தைகளை, அவ ற்றின் உணர்ச்சி வேறுபாடுகளு டன் கற்றுக் கொள்ளும் திறன் பெற்றுள்ளன. குழந்தைகள் தனது சுற்றுப்புறத்திலிருந்து தான் முத லில் கற்றுக் கொள்ள துவங்குகின் றனர். கட்டுக் கதைகளும், கற் பனை விளையாட்டுகளும் அவர் களை உயிர்ப்புடன் வைத்திருப் பவை. அவர்களுடைய ஒவ்வொரு நாளும் தேடல்கள் நிறைந்தவை. நிறைவான குழந்தைமை ( child hood) வாழ்வு இன்றைக்கு எல் லாக் குழந்தைகளுக்கும் கிடைப்ப தில்லை. படைப்பாக்கமும், தேடலும் இயல்புணர்வாய்க் கொண்ட குழந் தைகள் இன்று ஏக்கத்தையும், கனவையும், பெருமூச்சையும் சுமந்து திரிகிறார்கள்.
கையில் வைத்தி ருக்கும் விளையாட்டுப் பொருளை பறித்தாலே பரிதவித்துப்போகின்ற அவர்களிடம், குழந்தைகளின் அடையாளமான குழந்தைமை பறிக்கப்படுகிறது. இன்றைய பொரு ளாதாரச் சூழல் தரும் நிர்பந்தத்தின் காரணமாக கிட்டத்தட்ட சமூகத் தின் எல்லா தட்டு குழந்தைகளுக் கும் இது நேர்கின்றது. குழந்தை மைத் திருட்டு இயல்பாய் நடந் தேறுகின்ற செயல் அல்ல. அது திட்டமிட்டுச் செய்யப்படுகின்றது. இன்றைய தாராளமயச் சூழல் அத் தகைய திருட்டை கோரிப் பெறு கிறது. பெரும் லாப விகிதங்களை இலக்காகக் கொண்டு இயங்கு கின்ற பெரும் நிறுவனங்களுக்கு அதை தங்குதடையில்லாமல் அடைய, அவர்கள் விரும்புகிற பண்பாட்டு, கலாச்சாரச் சூழல் தேவைப்படுகிறது. அத்தகைய சூழல் உருவாக்கத்தில் குழந்தை களே அதிக அளவில் பாதிக்கப்படு கின்றனர். இயல்பிலேயே குழந்தைகள் மனிதநேயம் நிரம்பியவர்கள். விளை யாடித் தோற்பதை, தோற்றுத் தோற்று விளையாடுவதை இயல்பாய்க் கொண்டவர்கள். வெற்றியைப் போலவே, தோல்வியையும் ஏற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள்.
வஞ்சகம் சிறிதும் இல்லாதவர்கள், தவறு களை ஒத்துக்கொள்ள தயங்காத வர்கள். இப்படியான குழந்தை களின் குணங்கள் பெரும் நிறுவனங் களின் லாபமீட்டல் நடவடிக்கை களுக்கு நேர் எதிரானவை. எனவே தான் அவை மாற்றியமைக்கப்படு கின்றன. இன்று சின்னத்திரையில் விரியும் எல்லா விளம்பரங்களிலும் குழந்தைகள் காட்சிப்படுத்தப்படு கின்றனர். நுகர்வியம் ஒரு வாழ்வி யலாக இளம் மனதில் விதைக்கப் படுகிறது. சக மனிதர்கள் மீதான நேசமும், அன்பும் தேவையில்லை. போட்டியும், தோல்வியில்லாத வெற்றியுமே இன்றைய தேவை என போதிக்கப்படுகின்றது.
குழந்தைப் பருவம் எதிர்கால வாழ்விற்கான தயாரிப்புக் களமாக மாறி, எல்லா அறிவையும் இப்போதே திணித்து விட முயற்சிக்கின்றனர்.பள்ளிக்கூடங்கள் மிக மோச மாக குழந்தைகளின் இயல்பைத் திருடுகின்றன. 5 - 6 மணி நேர பாட வேளைகளுக்குப் பிறகு விளை யாடி, ஓய்வு எடுத்து, இயற்கையின் நடுவே குழந்தைகள் வாழ்வதற்குப் பதிலாக, இன்னும் 4 மணி நேரம் மீண்டும் புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருக்கிற துரதிர்ஷ்டத்தை குழந்தைகள் உள்ள பெரும்பாலான இல்லங்களில் காண நேர்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பெறுகின்ற இயற்கையான வளர்ச்சியை, அவர் களது சிறப்பியல்புகளை, ஆர்வங் களை மற்றும் தேவைகளை உற்று நோக்குகின்ற பள்ளிகளைத் தேட வேண்டி இருக்கிறது. குழந்தைகள் தேசத்தின் சொத்து என்கிற பார் வையில் நமது அரசும் நடந்து கொள்வதில்லை. தேசத்தின் முதல் பிரதமரான நேருவின் இன்றைய வாரிசுகளான மத்திய ஆட்சியாளர் களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலையேயில்லை. இந்திய மக் கள் தொகையில் 46 சதவிகிதம் குழந்தைகள். ஆனால் அவர்களுக் கான பட்ஜெட் நிதி ஒதுக்கிடு 4.6 சதவிகிதமாகவே உள்ளது.
குழந் தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந் தைகள் ஆரோக்கியம் போன்றவை பெரும் புறக்கணிப்பிற்குள்ளாகிறது. 5 முதல் 14 வயது உடைய குழந்தை களில் 4 கோடி பேர் பள்ளி செல்வ தில்லை. 8ம் வகுப்பை அடைவதற் குள் 8 கோடி குழந்தைகள் பள்ளி களை விட்டு இடைவிலகலில் வெளியேறுகின்றனர். நாட்டில் உள்ள மொத்தக் குழந்தைகளில் 40 சதவிகிதம் பேர் போதிய எடை யின்றி உள்ளனர். இந்நிலையைச் சரிசெய்ய உறுதியான தலை யீட்டை செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது.
இதற்கெதிராக உரத்தக் குரல் எழுப்ப வேண்டியுள்ளது. தற்போதைய சூழலைக் கொண்டு குழந்தைகளை அமைப்பு ரீதியாகத் திரட்டும் முயற்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆர்.எஸ். எஸ் போன்ற மத அடிப்படை வாத இயக்கங்கள் ஈடுபட்டு வரு கின்றன. இவற்றுக்கு மத்தியில் குழந்தைமை இயல்பு மாறாமல் அவர்களை வளர்த்து எடுக்கும் பணியில் தமிழ்நாடு பாலர் சங்கம் ஈடுபட்டு வருகிறது. மனித நேய மும் சமூக அக்கறையும் உள்ளவர் களாக, உழைப்பின் மீது பற்றும் விடா முயற்சியும் கொண்டவர் களாக சாதிய, பாலினப் பாகுபாடு களுக்கு எதிரானவர்களாக மற்றும் அறிவியல் பார்வையோடு வாழ்வை எதிர்கொள்பவர்களாக குழந்தை களை உருவாக்க வேண்டியுள்ளது. தாராளமய நச்சுக் காற்றால் காய்ச் சல் கண்டுள்ள அவர்களது குழந் தைமையை மீட்டுத் தந்து தேட லுக்கும் படைப்பாக்கத் திறனுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்து சமூகத் தின் அனைத்துக் குழந்தைகளுக் கும் நம்பிக்கை ஊட்ட வேண்டி யுள்ளது. முதலாளித்துவ போலி அறநெறிகளுக்கு எதிரான மாற்றை அடையாளம் காட்ட வேண்டியுள் ளது. இந்தப் பணியில் எல்லோரும் இணைய வேண்டும்.-

No comments:

Post a Comment