Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 5 November 2013

வருவாய் மாவட்ட அளவில் இ.பருவத்தேர்வு நாளை துவக்கம்

 ஈரோடு மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., முதல் ப்ளஸ் 2 கல்வி பயிலும் அனைத்து பள்ளி, மாணவ, மாணவியருக்கு இரண்டாம் இடைப் பருவத்தேர்வு நாளை (6ம் தேதி) முதல் துவங்குகிறது.இந்தத் தேர்வுகள் அனைத்தும், அந்தந்த வகுப்பிலேயே, பாடப்பிரிவு வேலைகளில் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.எஸ்.எஸ்.எல்.ஸி.,: நவ., 6ல் தமிழ், 7ல் ஆங்கிலம், 8ல் கணிதம், 11ல் அறிவியல், 12ல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு, மூன்று மற்றும் நான்காம் பாடப்பிரிவு வேலைகளில் நடக்கிறது.ப்ளஸ் 1: நவ., 6ல் ஆங்கிலம், 7ல் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரஞ்ச், கன்னடம், 8ல் கணிதம், விலங்கியல், பொருளியல், தட்டச்சு, 11ல் கம்ப்யூட்டர் சயின்ஸ், மனையியல், சிறப்பு தமிழ், அரசியல் அறிவியல், செவிலியல், உயிர் வேதியியல், நுண் உயிரியல், 12ல் உயிரியல், தாவரவியல், வணிகக் கணிதம், புள்ளியில் ஆகிய பாடங்களுக்கான தேர்வு தினமும் மூன்று அல்லது நான்காம் பிரிவு வேலைகளில் நடக்கிறது.நவ., 8ல் இயற்பியல், வணிகவியல், 11ல் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், செய்முறை, கருத்தியல், சுருக்கெழுத்து, உளவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு, ஏழு மற்றும், எட்டாம் பாடப்பிரிவேலைகளில் நடக்கிறது.ப்ளஸ் 2: நவ., 6ல் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரஞ்ச், கன்னடம், 7ல் ஆங்கிலம், 8ல் இயற்பியல், வணிகவியல், 11ல் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், கருத்தியல், சுருக்கெழுத்து, 12ல் கணிதம், விலங்கியல், பொருளியல், தட்டச்சு, கருத்தியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு, மூன்று மற்றும் நான்காம் பிரிவேலைகளில் நடக்கும்.நவ., 8ல் இயற்பியல், வணிகவியல், செய்முறை, 11ல் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், செய்முறை, கருத்தியல், சுருக்கெழுத்து, உளவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு ஏழு மற்றும் எட்டாம் பிரிவேலைகளில் நடக்கிறது.

No comments:

Post a Comment