Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 7 November 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் இடம் பிடித்தவர்கள்

பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல் அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 6 லட்சத்து 70ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு படித்தவர்களும் உண்டு. தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.
இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் ஈரோட்டைச்சேர்ந்த ராஜம்மாள் 126 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார்.
திண்டுக்கல்லைச்சேர்ந்த வி.சத்யா, விழுப்புரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தலா 122 மதிப்பெண் எடுத்து 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதியவர்களில் தூத்துக்குடியை சேர்ந்த ஆர்.வினுஷா 126 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பெற்றார். ராமநாதபுரத்தை சேர்ந்த பி.ராஜகாளீஸ்வரி 123 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். காஞ்சீபுரத்தை சேர்ந்த வி.மேகலா, ஈரோடு மூர்த்தி, திருவண்ணாமலை அன்பரசி ஆகியோர் தலா 122 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று வேலை வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment