Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 25 December 2013

பிளஸ் 2 செய்முறை தேர்வு மாணவர் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 3ம் தேதி பொது தேர்வு தொடங்கி 25ம் தேதி முடிகிறது. இதையடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாடம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல்களை தயாரித்து அவர்களின் போட்டோகளையும் இணைத்து டிசம்பர் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து மாணவர்கள் குறித்த பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு இரண்டு முறை அவை சரிபார்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இறுதிப் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகங்களுக்கு தற்போது வந்து சேர்ந்துள்ளன.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் 2 அல்லது 3ம் தேதி செய்முறைத் தேர்வுகளை தொடங்க தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது. 

அதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தனியாக  தயாரிக்கப்படுகிறது. செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாடவாரியாக 24 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பட்டியல் தயாரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.இதையடுத்து அந்தந்த மாவட்டத்திலும் 4 தலைமை ஆசிரியர்கள் கொண்ட ஒரு குழு அமைத்து மொத்த மாணவர்கள் எவ்வளவு பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர் என்ற பட்டியலும் தயாரிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை தேர்வுத் துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இதுவரை பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment