Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 27 December 2013

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை


அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உளவியல் ஆலோசனை தொடர்பான திட்டத்தை மற்ற மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த உரிய ஆவணங்களை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கேட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை, பாடம் படிப்பதில் போதிய கவனம் செலுத்துவது இல்லை, தேர்வுகளில் பங்கேற்பதில்லை. இது தவிர பல்வேறு உளவியல் சார்ந்த பிரச்னைகள் காரணங்களாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் உளவியல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் குறித்து கடந்த ஆண்டு முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி 242 பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவ மாணவியர் உளவியல் சார்ந்த பிரச்னை உள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த வகை மாணவ மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதையடுத்து சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, நெல்லை, புதுக்கோட்டை என 10 மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்துக்கு தலா 3 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த மண்டலங்களில் அடங்கிய 242 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் உளவியல் மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் கடந்த மாதம் முதல் ஒவ்வொரு பள்ளியாக உளவியல் ஆலோசகர்கள் சென்று ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதுவரை 29 ஆயிரத்து 432 மாணவ மாணவியருக்கு உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்டது. மீதம் உள்ள 70 ஆயிரம் மாணவ மாணவியருக்கு அடுத்தடுத்து உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
 
இதற்கிடையே, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உளவியல் ஆலோசனை குறித்து தகவல் அறிந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினர் ஒரு குழுமை தமிழகத்துக்கு அனுப்பியது. அந்த குழு உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டது. பின்னர் இது போன்ற உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி கொடுக்க கேட்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பள்ளிக் கல்வித்துறை ஆவணங்களை தயார் செய்து வருகிறது.இது தவிர, கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் நினைவு நூலக நிறுவனத்தின் இயக்குநர் தலைமையில் ஒரு குழு கடந்த வாரம் தமிழகம் வந்தது. உளவியல் ஆலோசனை மையங்களின் செயல்பாடுகளை பார்த்த அந்த குழுவினர், மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த உளவியல் ஆலோசனை மையம் தொடர்பான திட்டம் குறித்த விரிவான அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது.

No comments:

Post a Comment