Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 26 December 2013

தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதிய, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள், தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஆன்லைன்'ல் பதிவு செய்த பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்", மதம், இனம் ஆகியவற்றை சரிபார்த்து, 2014 ஜன.,4 ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்' மூலம், ஜன.,1 முதல் 3 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும், தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Click Here

No comments:

Post a Comment