Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 19 August 2014

11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.

சபிதா பேச்சு:

தஞ்சையில் நடந்த 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற 
ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபிதா 
பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தரமான கல்வியை வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை 
நிறைவேற்றி வருகிறார்.

மேலும், ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் 
நிரப்ப உத்தரவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்கள் 
நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் 11ஆயிரத்து 900 ஆசிரிய ஆசிரியைகள் 
நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவினை வழங்க உள்ளார். 
மாணவர்கள் கல்வி இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு 
செய்துள்ளார்.

தரம் உயர்வு:

1200 பள்ளிகள் தரம் 
உயர்த்தப்பட்டுள்ளது. 42 தொடக்கப்பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 
மாணவ, மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும், விலையில்லா மடிக்கணினியும் 
வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சென்ற ஆண்டை 
விட தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி 
விகிதம் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத 
தேர்ச்சியை கொண்டு வர வேண்டும். அதற்கு கடுமையான உழைப்பையும் மாணவர்களுக்கு
பயிற்சியும் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment