Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 15 August 2014

கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு


மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில், பணி ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை.

தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' ஜூனில் நடந்தது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26 ல் நடந்தது. அப்போது, மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட 'சர்பிளஸ்' ஆசிரியர்களை, பணிநிரவல் அடிப்படையில் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, கல்வித் துறை உத்தரவிட்டது.

இப்புதிய பணியிடங்களை, ஜூன் 26 ல் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் 'கவுன்சிலிங்' மூலம் சுமார் 200 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 26 பணியிடங்கள் இந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டது. ஆனால், பணியேற்று ஒரு மாதம் நிறைவுற்றும், அவர்களுக்கு சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கலந்தாய்வில் கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான அரசு உத்தரவை எதிர்பார்க்கிறோம். பின், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டும். ஓரிரு வாரங்களில் இதற்கு தீர்வு கிடைத்து விடும். அதன்பின், வழக்கம்போல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்," என்றார்.

No comments:

Post a Comment