Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 17 August 2014

ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்


ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற 8ம் வகுப்பு மாணவர்கள் மேல்படிப்பு படிக்க வசதியாக மத்திய அரசு சார்பில் ரூ.1500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம். 7ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவ மாணவியர் இந்த தேர்வில் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம். 

இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இணையதள முகவரி லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ ஆகும். பள்ளியில் இருந்தே பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 22ம் தேதிக்குள், பெற்று பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை ஆகஸ்ட் 28க்குள் முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 28ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் பெறக்கூடாது என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment