Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 19 August 2014

வருவாய்வழி உதவித்தொகை எப்போது?


தேசிய வருவாய்வழி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் 2008 முதல் தேசிய திறனாய்வு கல்வி உதவி திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பரில் நடக்கும் இந்த தேர்வை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். ஏழாம் வகுப்பு இறுதிதேர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண், மற்ற பிரிவினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.தேர்வு எழுதியவர்களில் மாநிலம் முழுவதும் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நான்கு 
ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதற்காக மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, அதன் விபரம் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2010 க்கு பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்வுபெறும் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசே நேரடியாக உதவிதொகையை அனுப்புகிறது. இதனால் இதுகுறித்த விபரம் முழுமையாக எங்களுக்கு தெரியவில்லை. சுயநிதி பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment