Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 15 August 2014

அரசு ஊழியர்கள், பகுதி நேரமாக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை, ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ளலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பகுதி நேர எழுத்தர் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ரகமத்துல்லா(வயது 63). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

நான், கடந்த 1982–ம் ஆண்டு முதல் 1995–ம் ஆண்டு வரை பகுதி நேர பஞ்சாயத்து எழுத்தராக பணியாற்றினேன். அதன்பின்பு, அறந்தாங்கி பஞ்சாயத்து யூனியனில் இளநிலை உதவியாளராக நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டேன். 2007–ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். நான், நிரந்தர பணியில் இருந்த காலத்தை மட்டும் ஓய்வூதியத்துக்காக கணக்கில் எடுத்துக்கொண்டு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அரசு உத்தரவு 

பகுதி நேரமாக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு அடிப்படையில் நான், 13 ஆண்டுகள் பகுதி நேர பஞ்சாயத்து எழுத்தராக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதிய தொகையை உயர்த்தவும், அதன் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

8 வாரத்தில் வழங்க வேண்டும் 

இந்த மனு நீதிபதி கே.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–

மனுதாரரை பொறுத்தமட்டில் அரசாணைப்படி, அவர் 13 ஆண்டுகள் பகுதி நேர பஞ்சாயத்து எழுத்தராக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்காக அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பகுதி நேரமாக பணியாற்றிய காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி 8 வாரத்துக்குள் அதிகாரிகள் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தும் போது, அவர் ஓய்வு பெற்ற காலத்தில் இருந்து அந்த தொகையை கணக்கிட்டு பணப்பலன்களையும் சேர்த்து வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment