

உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Thursday, 27 February 2014
யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
யாருக்கு வாக்களிப்பது?பெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி போராட்டங்களைச் செய்தார்கள் ஆனால் அவ்வரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை அதனால் வெறுப்பில் இருந்த இடைநிலை ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் வண்ணம் அப்போதைய எதிர்க்கட்சி இப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு .க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஊதியக் குழு முரண்பாடுகள் நீக்கப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றது.ஆனால் இதுவரை அவைகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே இந்த முறை யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.இதுபோன்ற குளறுபடிகள் எல்லாத் துறைகளிலும் காணப்படுவதால் அவர்களும் குழப்பத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.எனவே இந்த முறை யார் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்பதை உற்றுநோக்கியே வாக்களிப்பார்கள் எனத் தெரிகிறது.இரண்டு முக்கிய கட்சிகளும் புறக்கணிப்பதால் ஆசிரியர்கள் போராட்டங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? : மத்திய அமைச்சரவைக் கூட்டப் பொருளில் 10% அகவிலைப்படி உயர்வு, ஓய்வு வயது 62 ஆக அதிகரிப்பு தான் இடம் பெற்றுள்ளன
Retirement Age 62 and 10% DA from Jan 2014 – Cabinet expected to clear on Friday (28.02.2014)
As per media news, Union cabinet is going to meet on Thursday or Friday(27th or 28th Feb. 2014) and the Cabinet is expected to clear two main agenda points in the meeting as follows…
One is Retirement Age 62: Retirement age of Central Government employees will increase by two years from 60 to 62 with effect from 1.3.2014.
Additional 10% DA from 1.1.2014 : 10% of Additional Dearness allowance from 1.1.2014 to all Central Government employees and pensioners, may be declared in the meeting.
ஆசிரியர் தனது முகத்தில் துப்பியதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி வாக்குமூலம்
சென்னையில் ஆசிரியர் திட்டி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தனது முகத்தில் துப்பியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
பி.எஸ்.சி., (வேதியியல்) மற்றும் பி.எட்., படித்துள்ளேன். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். அதில், 150 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதில் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், எதிர் காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் இந்தத் தளர்வு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான் 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 2013-ஆம் ஆண்டிலும், எதிர்காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்குவது போல், எனக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை (பிப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26) தொடங்கியது.
இந்தத் தேர்வை மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அனைத்து மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் செய்முறைத் தேர்வில் இந்த ஆண்டு பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் மார்ச் 7-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கால அட்டவணையைத் தயாரித்துள்ளனர்.
செய்முறைத் தேர்வுக்கு பிற பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: DINAMANI NEWS
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டப் போராட்டம் தொடர்பாக எங்களது செயற்குழுவில் கூடி முடிவு செய்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறினார்.
சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கட்டணங்கள் ரத்து
சுயநிதி கல்லூரிகளில் அனைத்துவிதமான படிப்புகளிலும் படிக்கும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு 2013-14 கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு அரசுக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணம் உள்பட அனைத்துக் கட்டணங்களையும் 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் அரசே வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணங்கள் அனைத்தையும் "போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை' திட்டத்தின் கீழ் அரசே வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயின்று தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இந்தக் கல்வி கட்டணச் சலுகையை மறுக்கும் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதை மத்திய அரசு தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேலும் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களின் டி.ஏ.வை 90 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் டெல்லியில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டி.ஏ 100 சதவீதம் உயர்த்தப்பட்டால் அது இந்தாண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இதற்கு முன் டி.ஏ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தேர்தலுக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் ஓட்டுக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு ஊழியரின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டால், அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை நிதியை நிதித்துறை அமைச்சகம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். அதன்பின் அந்த நிதிச்சுமை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசின் கையில் சென்று விடும்.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு கடைசி நேரத்தில் அறிவிப்பு: ஆசிரியர்கள், மாணவர்கள் தவிப்பு
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர்.
இதன்மூலம், பிரதான எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே, குளறுபடி கணக்கை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும், அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு 25 மதிப்பெண் ஒதுக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக செய்முறை தேர்வு குறித்த அறிவிப்பை 2 வாரங்களுக்கு முன்பே, தேர்வுத்துறை வெளியிடுவது வழக்கம். அப்போது தான், மனதளவில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவர். கடைசி நேரத்தில், தேர்வு தேதியை அறிவித்தால் மாணவர் மத்தியில், பதற்றம் தான் ஏற்படும்.
இதை அறிந்தும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அறிவிப்பை, தேர்வுக்கு முதல் நாள், தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளட்ட பல மாவட்டங்களில் நேற்று, செய்முறை தேர்வு துவங்கியது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை, நேற்று முன்தினம் தான் மாணவர்களுக்கு, ஆசிரியர் தெரிவித்தனர்.
"நாளைக்கு செய்முறை தேர்வு" என ஆசிரியர் கூறியதை கேட்டதும், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களுக்கான பதிவு எண்களும், நேற்று முன்தினம் தான், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனால் அவசர அவசரமாக, பதிவு எண்களை, பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு அறிவித்து உள்ளனர். இதனால், செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை பதிவு செய்வதற்கான படிவத்தை முன்கூட்டியே இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமலும், ஆசிரியர்கள் தவித்தனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆசிரியர் சரண்
வாணியம்பாடியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமறைவாக இருந்த கணித ஆசிரியர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி புதூரில் அரசு நிதியுதவி பெறும், கண்கார்ட்டியா பள்ளியில், 1,200 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த கோபி, அந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த, ஜனவரி, 28ம் தேதி, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியர், ஐந்து பேரை தன் வீட்டுக்கு அழைத்து சென்று, ஆபாச, "சிடி'க்களை பார்க்க வைத்து, பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, மாணவிகளின் பெற்றோர், வாணியம்பாடி டவுன் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார், தலைமறைவான ஆசிரியர் கோபியை தேடி வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், கணித ஆசிரியர் கோபி சரண் அடைந்தார். அவரை, 15 நாள் காவலில் அடைக்க, நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில், சில்மிஷ ஆசிரியர் கோபி அடைக்கப்பட்டார்.
1.30 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளும் பயிற்சி: பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெறுகிறது
'தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு, தயார் நிலையில் உள்ளோம். 60,000 ஓட்டுச்சாவடிகள் வரை அமைக்கப்படும். 20 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போதைக்கு, 60,418 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 70,000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு தொகுதியில், வேட்பாளர் எண்ணிக்கை, 15க்கு மேல் இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், கடைசி பட்டன், யாருக்கும் ஓட்டு இல்லை என்பதை குறிக்கும், 'நோட்டோ' பட்டனாக பயன்படுத்தப்படும்.
பயிற்சி:
தற்போதுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை, வாக்காளர் அறியும் வசதி இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தலா 14 தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பும் முடிந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு ஊழியர்களுக்கு, பயிற்சி அளிக்க, 130 பேருக்கு பயிற்றுனருக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், 5,500 மண்டல அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கின்றனர். அவர்கள் உதவியுடன், 1.30 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இம்மாதம் 26ம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறை குறித்து, பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொண்ட அதிகாரி, ஒரு வீடியோ கிராபர், மூன்று போலீசார் இருப்பர். இவர்களுக்கு, இன்றும், நாளையும், பயிற்சி வகுப்பு நடக்கிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சென்னையில், 28ம் தேதி, தேர்தல் பணி குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஒருங்கிணைப்பு:
தினமும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கலெக்டரிடம், தேர்தல் பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில், தேர்தல் பணிகளை கவனிக்க, 11 தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, தலா, இரண்டு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மாவட்டங்களில் உள்ள, தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேசி, தேர்தல் பணிகளை, கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில், தேர்தல் பணியில், போலீஸ் அல்லாத பணியாளர்களாக, 3.50 லட்சம் பேர், போலீசார் ஒரு லட்சம் பேர், ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான ஓட்டுச்சாவடி, அதிக ஓட்டுப் பதிவு நடைபெறும் ஓட்டுச்சாவடியை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அங்கு, 'மைக்ரோ அப்சர்வர்' களாக, மத்திய அரசு அலுவலர்கள் நியமிக்கப்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், டெபாசிட்டாக, 25,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், அதில், 50 சதவீதம் செலுத்தினால் போதும்.
தேர்தலுக்கு தயார்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தப்படும். வழக்கமான திட்டப் பணிகள் நிறைவேற்றுவதில், தடை கிடையாது. தமிழகத்தில், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 9 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு, 10 நாட்களுக்கு முன் வரை, மனு கொடுக்கலாம். கடந்த தேர்தலில், 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டது. இந்த தேர்தலில், 20 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு, தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு, பிரவீண்குமார் தெரிவித்தார்.
இலவச கல்விக்கு பழைய முறையே தொடரும்
தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, "கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான இலவச கல்வியில், பழைய முறையே தொடரும்' என, அரசாணை ?வளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ?வளியிடப்பட்ட அரசாணையின் படி, "கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கப்படும். நூலகம், பயிற்சி, மாணவர் சங்கம் உள்ளிட்ட, எந்த கட்டணத்தையும் கட்ட தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ?வளியிடப்பட்ட அரசாணையின்படி, சுயநிதி கல்லூரிகளில், கல்லூரி நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு, பாதி தொகை மட்டுமே வழங்கப்படும் என, அறிவித்தது. இதனால், தமிழகம் முழுவதும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது. இத்திட்டத்தில் பழைய முறையே, தொடர வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, "தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி ?வளியானது. இதைத் தொடர்ந்து, நேற்று ?வளியிட்டுள்ள அரசாணையில், பழைய முறையே தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதலே, அரசாணை அமலுக்கு வரும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)