Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 February 2014

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் நாளை நடைபெறும் மத்திய  அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என  நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதை மத்திய அரசு தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேலும் நுகர்வோர் விலை குறியீடு  அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களின் டி.ஏ.வை 90 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு  விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் டெல்லியில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டி.ஏ 100 சதவீதம் உயர்த்தப்பட்டால் அது இந்தாண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். 

இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இதற்கு முன் டி.ஏ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 90 சதவீதமாக  உயர்த்தப்பட்டது. அது கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தேர்தலுக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு  குறிப்பிடத்தக்க வகையில் ஓட்டுக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு ஊழியரின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டால், அவர்களுக்கு வழங்க  வேண்டிய பணிக்கொடை நிதியை நிதித்துறை அமைச்சகம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். அதன்பின் அந்த நிதிச்சுமை அடுத்து ஆட்சிக்கு வரும்  அரசின் கையில் சென்று விடும்.

No comments:

Post a Comment