Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 28 February 2014

நெட் தேர்வில் ஓ.பி.சி.,மாணவர்கள் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது

நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.

அதுதொடர்பாக கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள் 55% பெற்றாலே போதுமானது.

இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும் இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில் வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில் காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஏற்கனவே நீதிமன்றம் சென்ற ஒரு வழக்கின் அடிப்படையிலேயே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment