Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 28 February 2014

பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபடும் கிராமங்கள், பள்ளிகள், சுயஉதவிகுழுக்களுக்கு பரிசு


தமிழ்நாட்டினை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு உதவியாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதில், மாநிலத்தில் சிறந்து விளங்கும் கிராமங்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் மூன்று சிறந்த பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக இருக்க வேண்டும், பசுமையான, சுத்தமான முன்னோடி கிராமமாக இருக்க வேண்டும். மழைநீர் சேகரித்தல், சூரிய சக்தி தகடுகள் நிறுவுதல், மரம் வளர்த்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கிராமங்களாக இருக்க வேண்டும். முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.சிறந்த சுயஉதவிக்குழுக்கள், தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பதில் முக்கிய பங்காற்றியிருத்தல் வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வுப்பணிகள், துணிப்பைகள், காகிதப்பைகள், காகிதக்குவளைகள், சணல் பைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். 

முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.பசுமையான, சுத்தமான பள்ளிகள், பிளாஸ்டிக் இல்லாத பசுமை மற்றும் சுத்தமான பள்ளிகளாக இருக்க வேண்டும். கருத்தரங்குகள், நடைப்பயணம், பேரணி, முகாம், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.மேலும் தகவல்களை www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment