Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 25 February 2014

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மாவட்டங்கள் ஒதுக்கீடு
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி கல்வி துறை இயக்கங்களை சேர்ந்த அனைத்து இயக்குநர்களுக்கான கூட்டம் அரசு தேர்வுத் துறை இயக்குநரால் கூட்டப்பெற்று, இணை இயக்குநர்கள் தேர்வு பணிகளை கண்காணித்திட, அவர்களுக்கு உரிய மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு பணிகளை கண்காணித்திட உயர் அதிகாரிகள், இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களுக்கான மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட ஒதுக்கீடு விவரம் வருமாறு:–
கன்னியாகுமரி
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் என்.மகேஸ்வரன்–சிவகங்கை மற்றும் ராமநாதபுரம், அரசு துணை செயலாளர் எஸ்.பழனிச்சாமி–கன்னியாகுமரி, அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன்–சென்னை, பள்ளி கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன்–காஞ்சீபுரம், தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன்–திருவள்ளூர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், மாநில திட்ட இயக்குநர் எஸ்.சங்கர்–விழுப்புரம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை–கடலூர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பள்ளிகள் கழக செயலாளர் எஸ்.அன்பழகன்–வேலூர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன்–ஈரோடு மற்றும் திருப்பூர், பள்ளி கல்வி இயக்ககம் இணை இயக்குநர்(தொழிற்கல்வி) தர்ம.ராஜேந்திரன்–கோவை மற்றும் நீலகிரி, பள்ளி கல்வி இயக்ககம் இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அ.கருப்பசாமி–திருச்சி மற்றும் புதுக்கோட்டை.
பள்ளி கல்வி இயக்ககம் இணை இயக்குநர்(இடைநிலை) எம்.பழனிசாமி–திருநெல்வேலி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இணை இயக்குநர் செ.கார்மேகம்–திருவண்ணாமலை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் எஸ்.உமா–நாமக்கல்.
சேலம்
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் இணை இயக்குநர் சுகன்யா–கிருஷ்ணகிரி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்(நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி–சேலம்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment