Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 February 2014

பொதுத்தேர்வு வினாத்தாள், விடைத்தாளை கொண்டு செல்ல துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2, பத்தாம்வகுப்பு பொதுதேர்வில், முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள், விடைத்தாளை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காரில் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ல் துவங்குகின்றன. விடைத்தாளில் மாணவரின் போட்டோ, பார்கோடிங் முறை அமல்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில், தேர்வு மையத்திற்கு, வினாத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி அலுவலர்கள், இருசக்கர வாகனம், பஸ்சில் எடுத்து வந்தனர். 
அதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்ததால், தற்போது, வினாத்தாள் பாதுகாப்பு மையத்திலிருந்து, தேர்வு நடக்கும் மையத்திற்கு, வினாத்தாளை எடுத்து வர, வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காரில், அன்றைய தேர்விற்கான வினாத்தாளை, தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டும். 
பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு தொடங்கும் நேரத்தில், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாளை பிரிக்க வேண்டும். இதை உறுதிபடுத்த மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். தேர்வு முடிந்ததும், மாணவர்கள் விடைத்தாள்கள், தேர்வு எழுதியோர் பற்றிய விபரம், ஐந்து வினாத்தாள், தேர்வுக்கு வராத மாணவர்கள் விடைத்தாள் முகப்பு சீட், தேர்வு எழுதிய மாணவர்களின் முகப்பு சீட்டில் உள்ள "ஏ' படிவம் ஆகியவற்றை தனித்தனியாக கவரில் வைத்து, "சீல்' இட வேண்டும். 
இதை சேகரித்து வழித்தட அலுவலர்கள், மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment