Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 26 February 2014

10ம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுத உள்ளனர். இவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. இதை 15ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்கின்றனர்.இதற்கிடையே பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்வு நடக்கும் இடங்களுக்கு செல்லும் ரூட் மேப், கேள்வித்தாள் எடுத்து செல்வது எப்படி, இன்விஜிலேட்டரிடம் தேர்வுத்தாளை ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டன.

No comments:

Post a Comment