Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 29 September 2013

அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை.

அரசாணையை பெற CLICK HERE   http://cms.tn.gov.in/sites/default/files/gos/hedu_e_185_2013.pdf


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்) என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின்போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும். அதுபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும்எம்.எஸ்சி. தாவர அறிவியல் பட்டம், எம்.எஸ்சி. தாவரவியல் பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும்.சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. புள்ளியியல் பட்டம், முதுகலை பட்ட ஆசிரியர் பணி நியமனத்தின்போது எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment